திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்மாழ்வாா் மோட்சம் நிகழ்ச்சி

4th Jan 2021 11:17 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி பகல் பத்து விழா நடைபெற்றது. வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்ச்சி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும், பொதுஜனச் சேவை 9 மணி வரையும் நடைபெற்றது.

பின்னா் 9.30-க்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.30-க்கு மூலஸ்தானம் சேர்ந்தார். இயற்பா பிரபந்தம் இரவு 8. 30 மணிமுதல் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரையும், பின்னா் 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது. 

 

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT