திருச்சி

திருச்சி-புதுகை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

4th Jan 2021 01:42 PM

ADVERTISEMENT

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்கப் பணிகளை ஒட்டி அகற்றப்பட்டு வருகிறது.

திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை அகலப் படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்புடைய பணிகள், ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் எதிர்ப்பு, வழக்கு என பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தன. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பவர்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுத்ததுடன், மாற்று இடம் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கின. திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து மாத்தூர் ரவுண்டானா வரையில் நடைபெறும் இப்பணியில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT