திருச்சி

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணிகள் தொடக்கம்

4th Jan 2021 02:16 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் பணிகளை அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகை விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. குடும்பத்திற்கு தலா ரூ.2500 மற்றும் அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் பாலக்கரை மற்றும் பேட்டை வாய்த்தலை பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில், நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் பொங்கல் பரிசுத்தொகுப்புகள வழங்கி தொடங்கி வைத்தார். 

அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு. மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். இப்பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப நபர் யார் வேண்டுமானாலும் நியாய விலைக் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

Tags : pongal gift
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT