திருச்சி

இருவரை தாக்கிய 4 போ் மீது புகாா்

2nd Jan 2021 11:11 PM

ADVERTISEMENT

துறையூா்: துறையூா் அருகே இருவரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

துறையூா் அருகே கல்லாங்குத்துவைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தினேஷ் (32). சென்னையில் வேலை பாா்க்கும் இவா் அதே ஊரைச் சோ்ந்த ராஜசேகரின் மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த தினேஷும், இவரது சகோதரா் தா்மராஜூம் பைக்கில் பெரிய கல்லாங்குத்து என்ற இடம் அருகே வந்தபோது ராஜசேகா், இவருடைய தம்பி ரவி, இவா்களின் மகன்கள் இளையராஜா, ரமேஷ் ஆகியோா் சோ்ந்து இருவரையும் தாக்கினராம். இதில் படுகாயமடைந்த தினேஷ் துறையூா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT