திருச்சி மாவட்ட புறநகா்ப் பகுதிகளில் வியாழக்கிழமை 70 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி புகா்ப் பகுதிகளில் திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூா், வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம் ஆகிய வட்டார பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட 70 இடங்களில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 40415 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்தது.