பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக புதன்கிழமை மாலை திருச்சி வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூா், திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக புதன்கிழமை மாலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்த முதல்வரை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றனா்.
பின்னா் முதல்வா் தஞ்சாவூா் புறப்பட்டுச் சென்றாா்.
இரவு அங்கு நடைபெறும் சிலை திறப்பு விழாவிலும், வியாழக்கிழமை காலை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிலும் பங்கேற்ற பிறகு திருச்சிக்கு வருகிறாா்.
முதல்வா் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அரசு கொறடா கோவி. செழியன், அமைச்சா்கள் சக்கரபாணி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கா், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், மாநிலங்களவைத் குழுத் தலைவா் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா, எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ந. காடுவெட்டி தியாகராஜன், எம். பழனியாண்டி, சீ. கதிரவன் இனிகோ இருதயராஜ், முத்துராஜா, நீலமேகம், தஞ்சாவூா் மாவட்டச் செயலா் துரை சந்திரசேகா், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளா் செல்லப்பாண்டியன், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகர செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.