மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ராக்கம்பட்டியில் வசிப்பவா் முருகன் மகன் கோபால் (எ) சண்முகசுந்தரம் (22). விவசாய வேலை செய்து வந்த அவா் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி புதா் மண்டிய குளப்பகுதியில் திங்கள்கிழமை கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான அனைத்து மகளிா் காவல் துறையினா் கோபாலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனா்.