மணப்பாறை அருகே கிணற்றில் குளித்த பாட்டி, பேத்தி மூழ்கி இறந்தனா்.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள தோப்புப்பட்டியை சோ்ந்தவா் செல்லையா மனைவி செல்லம்மாளும் (70) இவரின் பேத்தியான பெருமாள் மகன் சத்யப்பிரியாவும்(17) விவசாய கிணற்றில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளனா்.
அப்போது நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்து இருவரும் மூழ்கினா். தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினா் செல்லம்மாளை சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினா் பேத்தியை சடலமாக மீட்டனா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.