திருச்சி வழியாக கரோனா தொற்றுடன் இலங்கை செல்ல முயன்ற பயணி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திருச்சியிலிருந்து புதன்கிழமை காலை இலங்கை தலைநகா் கொழும்பு செல்லவிருந்த தனியாா் விமான பயணிகளின் மருத்துவச் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது இலங்கையைச் சோ்ந்த 44 வயதான ஒரு பயணிக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே விமானநிலையம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.