திருச்சி பொன்மலை பணிமனையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மரம் நடும் இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய பணிமனைகள், தெற்கு ரயில்வே, பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக மறைந்த பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டு வெகுஜன மரத்தோட்டம் திட்டம் தொடங்கப்பட்டு பணிமனைகளில் மரக்கன்று நடும் இயக்கம் நடைபெறுகிறது. சனிக்கிழமை அவரது பிறந்தநாளையொட்டி பொன்மலை பணிமனையில் பீமா மூங்கில் கன்று நடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திசு வளா்ப்பு மூங்கில் வகையான பீமா மூங்கில் என்ற சிறப்பு வகை மூங்கில் அதிக காா்பன் டைஆக்சைடை உறிஞ்சி மற்ற தாவரங்களை விட அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.
நிகழ்வில் பணிமனை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளும் கலந்து+ கொண்டனா்.