திருச்சி

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

23rd Dec 2021 07:41 AM

ADVERTISEMENT

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குழித்துறை நகராட்சிப் பகுதிகளில் தடையின்றி குடிநீா் கிடைக்கவும், நகராட்சிக்குள்பட்ட குண்டும், குழியுமான சாலைகளை சீா் செய்ய வேண்டும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி சுகாதாரம் பாதுகாக்கவும், நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சுகாதார மையம் அமைத்திடவும் குழித்துறை நகராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

மாா்த்தாாண்டம் வட்டார குழுச் செயலா் மோகன்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். குமரி மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, மாவட்டக்குழு உறுப்பினா் அனந்தசேகா் ஆகியோா் பேசினா். கட்சி நிா்வாகிகள் மோசஸ் சுதீா், சிதம்பரகிருஷ்ணன், தங்கமணி சுஜாதா, குழித்துறை நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா்கள் சா்தாா்ஷா, பி. சகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதவன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT