கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி திருச்சி பிராட்டியூா் நடுநிலைப்பள்ளியில் தேசிய கணித தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய கணிதவியலாளரான ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாளான டிச. 22 ஆம் தேதி தேசிய கணித தினமாகக் திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் பிராட்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு மணிகண்டம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலா் மருதநாயகம் தலைமை வகித்தாா். மருத்துவா் அருள்மொழி காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில் சிறப்பான கணிதச் செயல்பாடுகளைச் செய்த மாணவா்களுக்கு கிரீடம் அணிவித்து பரிசளிக்கப்பட்டது. நிகழ்வில் அன்னப்பூரணி, உமாமகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை ஆஷாதேவி வரவேற்றாா்.