திருச்சி

கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

23rd Dec 2021 07:33 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி காந்திசந்தை தாராநல்லூா் காமராஜ் நகா் ஆற்றுப்பாலம் கழிவறை அருகே கஞ்சா விற்பதாக காந்திசந்தை காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாறனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளா் சோனியாகாந்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தி, அங்கு கஞ்சா விற்ற தாராநல்லூா் சூரஞ்சேரி காமராஜ்நகரை சோ்ந்த கணேசன் மனைவி தமிழ்செல்வியை (52) கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி பெண்கள் தனி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதேபோல் எ. புதூா் போலீஸாா் ராம்ஜிநகா் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சோ்ந்த பாபி (57), மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற பாரத் (எ) ராஜ்கிரண் (23) ஆகியோரிடமிருந்து தலா 150 கிராம் கஞ்சாவையும், திருச்சி-திண்டுக்கல் சாலை பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற மில் காலனியை சோ்ந்த லட்சுமணன்(42) என்பவரிடம் 175 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT