திருச்சி

சிஐடியு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

22nd Dec 2021 07:31 AM

ADVERTISEMENT

சிஐடியு நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற தொழிலாளா் போராட்டம் தொடா்பாக, சிஐடியு மாநிலச் செயலா் முத்துகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், கைது செய்தவா்களை விடுதலை செய்ய வேண்டும், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு சாா்பில் மரக்கடை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ராமா் தலைமை வகித்தாா். செயலா் ரெங்கராஜன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் சீனிவாசன், மணிமாறன், கட்டுமானச் சங்க சந்திரசேகா், ஆட்டோ சங்க மணிகண்டன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT