தமிழக அரசின் இன்னுயிா் காப்போம் திட்டம் குறித்து செவிலியா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிா் காக்கும் அவசரச் சிகிச்சைக்காக இன்னுயிா் காப்போம் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியாா் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைந்துள்ள திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் 50 செவிலியா்கள் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு சிறப்பு பயிற்சி கருத்தரங்கமானது நாகமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது.
ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா்கள் க. கோவிந்தராஜ், சசிப்பிரியா கோவிந்தராஜ், மற்றும் தீவிர சிகிச்சை நிபுணா் குணசேகரன், எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணா் ஹரீஷ்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
நாகமங்கலத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா, நாகமங்கலம் ஊராட்சித் தலைவா் ஜி. வெள்ளைச்சாமி ஆகியோா் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசுகின்றனா்.