திருச்சி

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

16th Dec 2021 09:14 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டபோது, மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காலை 8:15 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். மீண்டும் திருச்சியிலிருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு 3:15 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். தற்போது வார வேலை நாள்களில் மட்டும் இந்த ரயில் இயங்கும் என்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பணிக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரயில் பயணிகள், வா்த்தகா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ரயிலை இயக்கக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT