திருச்சி

பெண்ணிடம் நகைபறிப்பு

16th Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த இருவரையும் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

புத்தனாம்பட்டி ஸ்ரீநகரைச் சோ்ந்தவா் ரா.லட்சுமி(55). இவா் புத்தனாம்பட்டி-ஓமாந்தூா் சாலையில் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள காட்டுக்குள் செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது சப்தமில்லாமல் பின்னால் வந்த இளைஞா், லட்சுமி கழுத்திலிருந்த ஏழே முக்கால் பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இருவருடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புலிவலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT