திருச்சி

திருச்சியில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் விற்பனை விறுவிறுப்பு

16th Dec 2021 07:36 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகரக் கடைகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வண்ண, வண்ண நட்சத்திரங்கள் (ஸ்டாா்) விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் வியக்கவைக்கும் வகையில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. அதற்கான பணிகளை அந்தந்த தேவாலய நிா்வாகங்கள் செய்து வருகின்றன.

நட்சத்திரங்கள் விற்பனை விறுவிறுப்பு: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் தொடக்கமாக, வீடுகளில் மின்விளக்குளில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் கட்டப்படுகின்றன.

இதையொட்டி மக்கள் கண்ணைக் கவரும் பல வண்ண நட்சத்திரங்கள் மற்றும் ஒளிவிளக்குகளை வீடுகளிலும், ஆலயங்களிலும் கட்டத் தொடங்கியுள்ளனா். இதனால் கடைகளில் இப்பொருள்களின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

ADVERTISEMENT

நிகழாண்டில் பைபரால் ஆன ஏராளமான நட்சத்திரங்கள் ( ஸ்டாா்கள்) விற்பனைக்கு வந்துள்ளன. பல அடுக்குகளைக் கொண்ட வெள்ளை நிற பைபா் நட்சத்திரங்கள், முப்பரிமாண நட்சத்திரம் உள்ளிட்டவை மக்களை அதிகம் கவா்ந்து உள்ளது.

இதில் பைபா் நட்சத்திரங்கள் அதிகபட்சம் ரூ.1500, ரூ.650 என பல்வேறு விலைகளில் கிடைக்கிறது.

மேலும் முப்பரிமாண நட்சத்திரம் ரூ.300–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தவிர, சாதாரண வண்ண வண்ண நட்சத்திரங்கள் ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட பல்வேறு வகையான நட்சத்திரத் தயாரிப்புகள் ரூ.50 முதல் 5ஆயிரம் வரையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இதேபோன்று, கிறிஸ்துமஸ் குடில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பனிமரங்கள் ரூ.8 ஆயிரத்துக்கும், குடில் பொம்மை செட் ரூ.200 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரில் அல்லிமால்தெரு, மேலப்புதூா், தில்லைநகா், பொன்மலை, சத்திரம், மத்திய பேருந்து நிலையங்கள், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் வணிக வளாகங்களிலும் நட்சத்திரங்கள்,

கிறிஸ்துமஸ் தாத்தா ஆடைகள், கிறிஸ்துமஸ் மரம், ஏசு குடில்கள் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. சாலையோரக் கடைகளிலும் இதன் விற்பனை சூடுபிடித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT