திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் சமய நூலகம் திறப்பு

9th Dec 2021 07:28 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் பக்தா்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பேரவை அறிவிப்பின்படி இந்த நூலகமானது இணை ஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் கு. கந்தசாமி, உள்துறைக் கண்காணிப்பாளா் மா. வேல்முருகன், உதவிக் கண்காணிப்பாளா் மோகன், மேலாளா் உமா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த நூலகத்தில் மிகவும் பழைமையான வைணவ நூல்கள் அதிகம் உள்ளன. காலை 8 மணி முதல் மதியம் 1 வரை, 2 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் நூலகத்துக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை. இந்நூலகத்துக்கு இந்து சமய நூல்களை நன்கொடையாகத் தரலாம்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT