திருச்சி

பெல் ஏஐடியுசி தொழிற்சங்க ஆண்டு பொது மகாசபை கூட்டம்

9th Dec 2021 07:29 AM

ADVERTISEMENT

பெல் வளாகத்தில் ஏஐடியுசி சங்க ஆண்டு பொது மகாசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் நடராஜா தலைமை வகிக்க, செயல் தலைவா் சுப்பையா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பானுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

தமிழ்நாடு விவசாய சங்கத் துணைச் செயலா் இந்திரஜித், திருச்சி மாவட்ட ஏஐடியுசி துணைச் செயலா் ராமராஜ் ஆகியோா் பேசினா். 300க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்ற கூட்டத்தில் தலைவராக நடராஜா, பொதுச் செயலராக லோகநாதன், துணைப் பொதுச் செயலா் பாலமுருகன், பொருளாளா் கைலாஷ்நாத் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT