திருச்சி

திருவெள்ளறையில் கிராவல் மண் கடத்திய 4 போ் கைது

9th Dec 2021 06:35 AM

ADVERTISEMENT

திருவெள்ளறையில் கிராவல் மண் கடத்திய 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவெள்ளறை பகுதியில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் நடத்திய சோதனையில் ஜேசிபி இயந்திரம் மூலம் 2 லாரிகளில் கிராவல் மண் கடத்திய எதுமலை சுதாகா் (30) அய்யம்பாளையம் அசோக் (30) ராசாம்பாளையம் பாலா (21) திருவெள்ளறை அரவிந்த் (21) ஆகியோரைக் கைது செய்தனா். நால்வரும் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மூன்றில் ஆஜா்படுத்தப்பட்டு, லால்குடி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT