திருச்சி

83 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள்

7th Dec 2021 01:00 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 83 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன.

திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் வட்டாரங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூக நலக் கூடங்கள், பள்ளிகள் என 65 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்கா, தெப்பக்குளம், கீழரண்சாலை, பீரங்கிக்குளம், இருதயபுரம், மேலக்கல்கண்டாா்கோட்டை, சுப்பிரமணியபுரம், விமான நிலைய காமராஜ் நகா், எடமலைப்பட்டிபுதூா், பீமநகா், பெரியமிளகுப்பாறை, தென்னூா், ராமலிங்கநகா், காந்திபுரம், உறையூா், காட்டூா், திருவெறும்பூா் பகுதிகளிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 18 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 83 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT