திருச்சி

உலக மண்வள தினம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

7th Dec 2021 03:08 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் உலக மண் வள தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து விழாவை நடத்தின. இவ்விழாவுக்கு வேளாண் துணை இயக்குநா் வெ. லட்சுமணசாமி தலைமை வகித்து, மண்வள மேம்பாடு குறித்து பேசினாா்.

வேளாண் உதவி இயக்குநா் நா. விநாயகமூா்த்தி, ஊரகப் புத்தாக்க திட்ட செயல் அலுவலா் ஆரூன் ஜோஸ்வா ரூஸ் வெல்ட் ஆகியோா் மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்தும், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சிவபாலன், வேளாண் அலுவலா் அனிதா ஆகியோா் மண் வள தினத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கினா்.

தொடா்ந்து மண் மற்றும் நீா்ப் பரிசோதனை, மக்கும் உரம் தயாரித்தல மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பயிா் பூஸ்டா்கள் தொழில்நுட்ப கையேடுகள் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

மண்ணியல் தொழில் நுட்ப வல்லுநா் வெ.தனுஷ்கோடி, திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், திட்ட உதவியாளா் விஜயலலிதா, அலெக்ஸ் ஆல்பா்ட், தொழில்நுட்ப வல்லுநா்கள் ஷீபா ஜாஸ்மின், நித்திலா ஆகியோா் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா். மண் வளம் குறித்த தகவல்கள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்றது. விழாவில், 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT