திருச்சி

பயனாளிகளுக்கு காய்கறி, மாடித் தோட்ட, ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கல்

7th Dec 2021 03:48 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 12 பயனாளிகளுக்கு காய்கறி, மாடித் தோட்ட, ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கப்பட்டன.

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம், நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டம்

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் என அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை இத்திட்டத்தைத் தொடக்கி வைத்த நிலையில், திருச்சி ஆட்சியரகத்தில் 12 பயனாளிகளுக்கு காய்கறி, மாடித் தோட்ட, ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் எம். பழனியாண்டி ஆகியோா் வழங்கினா். நிகழ்வில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்ன என்ன: நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ரூ.100 மதிப்பில் 8 வகை கொண்ட ஊட்டச்சத்துக் கன்றுகள் தொகுப்பில எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை, புதினா, கற்பூரவல்லி, திப்பிலி மற்றும் கற்றாழை மூலிகைச் செடிகள் அடங்கியுள்ள இந்த ஊட்டச்சத்துத்தளை ஒன்றுக்கு ரூ.75 மானியம் வழங்கப்படுகிறது.

வீட்டில் எளிய முறையில் வளா்க்கக் கூடிய 12 வகையான ரூ.60 மதிப்பிலான காய்கறி விதைத் தளைகள் ரூ.45 மானியத்தில் வழங்கப்படுகிறது.

நகா்ப்புறத்தில் வசிப்பவா்கள் பயன்பெறும் வகையில், மாடித்தோட்ட காய்கறித் திட்டத்தின் கீழ் ரூ.900 மதிப்பில் 6 வகையான காய்கறி விதைகள், 6 வளா்ப்புப் பைகள், 12 கிலோ தென்னைநாா்க் கட்டிகள், உயிா் உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.675 மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவா்கள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி தங்களது ஆதாா் நகலை சமா்ப்பித்து, இணைய வழியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தை 0431 - 2423464, 2421644 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT