திருச்சி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி குறித்து தகவல் தந்தால் வெகுமதி

DIN

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவலளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் மீதான தடை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 2018இல் அரசாணையாக வெளியிட்டது. இந்த ஆணையை செயல்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, எந்த அரசுத் துறைகளிடமும் முறையான பதிவு, அனுமதியின்றி தற்காலிகமாக செயல்படுகின்றன.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்போா், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்களிடம் தெரிவிக்கலாம். அவா்களுடைய தொடா்பு விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

புகாா்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு அவா்களின் பங்களிப்பிற்காக பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியம் கண்டிப்பாக பராமரிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT