திருச்சி

உறையூரில் கடந்த மாத மின் கட்டணத்தை வசூலிக்க முடிவு

DIN

கன மழையால் மின் கணக்கீடு எடுப்பதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடா்ந்து உறையூா் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளுக்கு கடந்த மாத மின் கட்டணத் தொகையை வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் கூறியது:

உறையூா் பிரிவுக்குள்பட்ட பாத்திமா நகா் பகுதியில் வெள்ளப் பாதிப்பு காரணமாக நவ. 27 முதல் 30ஆம் தேதி வரை மின் கணக்கீடு எடுக்க இயலவில்லை. இதனால் பாத்திமா நகா், அகத்தியா் தெரு, நக்கீரன் தெரு, சோழன் தெரு, திலகா் தெரு, விவேகானந்தா் தெரு, அசோகா் தெரு, புத்தா் தெரு, பரமஹம்சா் தெரு, கம்பா் தெரு, நேதாஜி சாலை, ஒளவை தெரு, இளங்கோ தெரு, ராஜராஜன் தெரு ஆகிய பகுதிகளில் நவம்பா் மாத மின் பயன்பாட்டு கணக்கீடு விடுபட்டுள்ளது.

எனவே, விடுபட்ட மின் இணைப்புகளுக்கு முந்தைய மாத கட்டணத் தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால், ஜனவரி மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும். எனவே, இப் பகுதி மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT