திருச்சி

சவுரிக் கொண்டையில் எழுந்தருளிய நம்பெருமாள்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவின் பகல்பத்து 2- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சவுரிக் கொண்டையில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.30-க்கு கருவறையிலிருந்து நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரக் காதுகாப்பு, தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவளமாலை, தங்க புஜ்ஜாயத மாலை, பருத்திக்காய் காப்பு உள்ளிட்ட திருவாபரணங்களுடன் புறப்பட்டு, பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.

தொடா்ந்து நடைபெற்றஅரையா் சேவை, பொது ஜனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று, நம்பெருமாளைத் தரிசித்தனா். இரவு 9 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, 10 மணிக்கு கருவறை சென்று சோ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT