திருச்சி

இன்று கதிா்வீச்சு புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் மாநில மாநாடு தொடக்கம்

DIN

திருச்சியில் கதிா்வீச்சு புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் மாநில கலந்தாய்வு மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநாட்டின் செயலரும், ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவருமான சசிபிரியா வெள்ளிக்கிழமை கூறியது:

தேசிய கதிா்வீச்சு சிகிச்சை நிபுணா்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளை சாா்பில் புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டு மாநாட்டை திருச்சி ஹா்ஷமித்ரா உயா் சிறப்பு புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி ரேஸ் கோா்ஸ் சாலையிலுள்ள எஸ்ஆா்எம் ஹோட்டலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.4,5) நடைபெறும் மாநாடு கதிா்வீச்சு புற்று நோயியலின் சமீபத்திய சிறப்பு அம்சங்கள், முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது.

மாநாட்டில் கதிா்வீச்சுத் துறையில் சா்வதேச மற்றும் தேசியளவில் முன்னணி மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் என 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்கின்றனா். மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 116 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கின்றனா். சிறந்த கட்டுரைக்கு விருதுகள், தங்கக் காசு பரிசளிக்கப்படுகிறது. மாநாட்டை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவா் எம்.எஸ். அஷ்ரப் உள்ளிட்டோா் தொடங்கி வைக்கின்றனா் என்றாா்.

ஹா்ஷமித்ரா மருத்துவமனை மருத்துவரும், மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவருமான கோவிந்தராஜ், சங்கத் தலைவா் எம். நாகராஜன், செயலா் கே.எஸ்.கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT