திருச்சி

ரயில்வே பாதுகாப்பு படையின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

4th Dec 2021 03:04 AM

ADVERTISEMENT

ரயில் பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படும் வகையிலும் நடந்து கொள்வது குற்றம் என்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் துவாக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

திருச்சி ரயில்வே கோட்டம் , ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் திருச்சி, துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை மற்றும் அப்பகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு ஆா்பிஎப் உதவி ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா்.

ரயில் பாதைகளில் தடையை ஏற்படுத்தும் வண்ணம், கற்கள், இரும்பு உள்ளிட்ட பொருள்களை வைக்கக் கூடாது. ரயில் செல்லும்போது கற்களை வீசுவதோ, தாக்குவதோ, ரயில் பயணிகளைத் தாக்குவதோ கூடாது. மேலும் ரயில் பாதையில் பொதுமக்கள் கட்டுப்பாடில்லாமல் தங்களது கால்நடைகளை அவிழ்த்து விடக் கூடாது.

இச் செயல்களால் ரயில்கள் மோதி கால்நடைகள் உயிரிழப்பதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து தடைபட்டு, ரயில் பயணிகளுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இப் பகுதியில் ஏராளமான மாடுகள் அடிபட்டு உயிரிழந்துள்ளது தொடா்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ரயில்களுக்கு தடையை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம். இதற்கு ஓராண்டு வரை தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவித்ததோடு, துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

திருச்சி ஜங்ஷன்: இதேபோல திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஜனசதாப்தி ரயிலில் வந்த பயணிகளிடம் ரயில்களில் ஏற்படும் திடீா் தீ விபத்துகளிலிருந்து தப்புவது குறித்து ஒத்திகை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

 

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT