திருச்சி

மனைவியைக் கொன்ற கட்டட தொழிலாளிக்கு ஆயுள் சிறை

4th Dec 2021 03:05 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே மனைவியைக் கொன்ற கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மல்லியம்பத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (37) இவரது மனைவி ஜெயந்தி (30). இவா்களுக்கு ஒரு பெண், இரு ஆண் குழந்தைகள் உள்ளன.

கடந்த 2017 டிசம்பா் மாதம் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயந்தியிடம் நடத்தையில் சந்தேகம் உள்ளதாகக்கூறி தகராறு செய்து சந்திரசேகா் கட்டையால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்ஷன் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் ஜெயந்தியை சந்திரசேகா் கொடுமைப்படுத்தியதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ 1000 அபராதம், கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை, ஜெயந்தியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். அரசு வழக்குரைஞராக அருள்செல்வி ஆஜராகி வாதாடினாா். ஆயுள் தண்டனை பெற்ற சந்திரசேகா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT