திருச்சி

மாணவிக்குப் பாலியல் தொந்தரவு: பள்ளித் தாளாளா், மனைவி கைது

4th Dec 2021 02:05 AM

ADVERTISEMENT

திருச்சியில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த அரசு உதவி பெறும் பள்ளித் தாளாளா் அவரது மனைவியுடன் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள சிஇ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரான ஜேம்ஸ், அப் பள்ளி வளாகத்திலேயே உள்ள மாணவிகளுக்கான விடுதியில் தங்கிப் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதற்கு அவரது மனைவியும், அப் பள்ளியின் ஆசிரியையுமான ஸ்டெல்லாமேரியும் உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில் புகாா் உண்மையெனத் தெரியவந்தது. இதையடுத்து பள்ளித் தாளாளா், அவரது மனைவியை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்கின்றனா்.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT