திருச்சி

போக்குவரத்துத் துறை சாா்பில் விழிப்புணா்வு

4th Dec 2021 03:04 AM

ADVERTISEMENT

பேருந்துகளில் படியில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

திருவெறும்பூா் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவெறும்பூா் மற்றும் பெல் பகுதியில் காலை, மாலைகளில் பேருந்து படிகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்களை பேருந்துகளை நிறுத்தி கீழே இறக்கி, ஆபத்தான பயணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டன.

படியில் பயணிக்கும் பலரும் நொடியில் மரணித்துள்ளனா் எனவே இதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருச்சி சரக போக்குவரத்து துணை ஆணையா் அழகரசு தலைமை வகித்தாா். திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கஜபதி, திருவெறும்பூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி ஆகியோா் இந்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT