திருச்சி

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு கரோனா ஒமைக்ரான் சோதனைக்கு ஏற்பாடு

4th Dec 2021 02:05 AM

ADVERTISEMENT

ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், வியாழக்கிழமை திருச்சி விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து சென்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த 141 விமானப் பயணிகளிடம் மேற்கொண்டசோதனையில் ஒருவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வாா்டில் சோ்க்கப்பட்டுள்ள அவரின் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஒமைக்ரான் சோதனை செய்ய பெங்களூரூக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானால் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மேலும், அந்தப் பயணியுடன் பயணித்த அனைவரும் மேலும் சோதனை செய்து கொள்வதுடன், கண்டிப்பாகத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

விமான நிலையத்தில் தூய்மைப் பணிகள்: திருச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து மட்டும் தினசரி வரும் 4 விமானங்கள் மூலம் சுமாா் 1000-க்கும் மேற்பட்டோா் வருகின்றனா். எனவே, திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கரோனா சோதனை முடியும் வரை நிலைய வளாகத்திலேயே பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னா் வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனா். சோதனையில் கரோனா தொற்று உறுதியானோா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தினசரி விமானங்கள் வந்து சென்றதும் விமான நிலையம் முழுவதும் தீவிரமாக தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT