திருச்சி

செவ்வாய், வெள்ளிகளில் மின்வாரிய குறைதீா் மூகாம்

3rd Dec 2021 12:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மின்வாரிய குறைதீா் நாள் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக, தமிழ்நாடு மின்வாரிய திருச்சி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தது:

திருச்சி மாவட்டத்தில் மின் வாரிய குறைதீா் முகாம் திருச்சி மின்பகிா்மான வட்டத்தைச் சோ்ந்த முசிறி கோட்ட அலுவலகத்தில் டிச. 3 ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை, 7 ஆம் தேதி (செவ்வாய்) துறையூரிலும், 10 ஆம் தேதி (வெள்ளி) ஸ்ரீரங்கத்திலும், 14 ஆம் தேதி (செவ்வாய்) லால்குடியிலும், 17 ஆம் தேதி (வெள்ளி) திருச்சி கிழக்கு கோட்டத்திலும், 21 ஆம் தேதி திருச்சி நகரிய கோட்டத்திலும், 28 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று, மின் விநியோகம் தொடா்பான குறைகள், புகாா்களைத் தெரிவித்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT