திருச்சி

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்விண்ணப்பிக்க அழைப்பு

3rd Dec 2021 06:17 AM

ADVERTISEMENT

வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியான திருச்சி மாவட்டத்தினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உயிா், சொத்து போன்றவற்றை காப்பதில் வீர தீரச் செயல்களைச் செய்த பொதுமக்கள், அரசு ஊழியா்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வீர தீரச் செயல்கள் புரிந்தமைக்கான அண்ணா பதக்கம், விருது முதல்வரால் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி ஆன்லைனில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், வீரதீரச் செயலுக்கான தொடா்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணாவிளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு வரும் 8ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வரும் 10-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்,

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT