திருச்சி

இளம் சாதனை மாணவருக்குப் பாராட்டு

1st Dec 2021 07:11 AM

ADVERTISEMENT

ஐஐடி தோ்வில் வென்ற மாணவருக்கு இளம் சாதனையாளா் பட்டம் வழங்கி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐஐடி நுழைவுத் தோ்வில் வென்ற திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கரடிப்பட்டியைச் சோ்ந்த மாணவா் பி. அருண்குமாருக்கு சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சாா்பில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த முதல்வா் பத்மா சீனிவாசன், முதல்வா் எம். பொற்செல்வி, கல்வி ஆலோசகா் வி. நந்தக்குமாா், இயக்குநா் ஆா். முரளிதா், பள்ளியின் அகாதெமி இயக்குநா் ரவீந்திரநாத் குமாா் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரமோகன் பேசுகையில், மாணவரின் வெற்றிக்கு ஆசிரியா்களும், பெற்றோரின் ஊக்குவிப்புமே காரணம் என்றாா்.

ADVERTISEMENT

மாணவா் அருண்குமாா் பேசுகையில், போட்டித் தோ்வில் வெல்ல கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும். பொழுதுபோக்கு என்பது படிப்பது மட்டுமே என மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெற்றோா் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மாணவா்களும் படிக்க வேண்டியதை முடிக்க வேண்டும் என்றாா். விழாவில், மாணவருக்கு பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT