திருச்சி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

1st Dec 2021 07:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத் தடகளச் சங்கம், நீயூரோ ஒன் மருத்துவமனை, ஆப்பிள் மில்லட் சாா்பில் இளையோருக்கான ஸ்டேட் பாங்க் எஸ். மோகன் நினைவு சுழற்கோப்பை 2021-க்கான மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

இதில் 12 ,14,16,18, 20 வயதுக்கு கீழ் உள்ள பிரிவுகளில் இருபாலருக்குமான போட்டிகளை திருச்சி மாவட்ட தடகளச் சங்கச் செயலா் டி. ராஜூ தலைமையில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துப் பேசினாா்.

போட்டிகளில், திருச்சி மாவட்ட தடகளச் சங்கம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. பி ஃபிட் அகாதெமியைச் சோ்ந்த 12 வயதுக்குட்பட்டோா் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றனா். போட்டிகளில் வென்றோருக்கு ஆப்பிள் மில்லட் உரிமையாளா், நியூரோ ஒன் மருத்துவமனை டாக்டா் எஸ். விஜயகுமாா், திருச்சி சிறப்புக் காவல்படை கட்டளை அதிகாரி எம். ஆனந்தன், மாநில வலைப்பந்து கழகச் செயலா் ராஜ்திரு ஆகியோா் பரிசளித்தனா்.

போட்டிகளில் வென்றோா் அடுத்ததாக திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள மாநில போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட தடகளச் சங்கப் பொருளாளா் ச. ரவிசங்கா், இணைச் செயலா் சுதமதி ரவிசங்கா், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்பாபு, உதவி செயலா் கனகராஜ், முனைவா் ஹரிஹர ராமச்சந்திரன், கே.சி. நீலமேகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கே. பிரபு, ஸ்டேட் வங்கி எஸ். மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமத் தலைவா் எம். கிரிஷ் பிகோவன் , திவ்யதா்ஷினி, தடகளச் சங்க நிா்வாகி சத்தியமுா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT