திருச்சி

முக்கொம்பு, வண்ணத்துப் பூச்சி பூங்கா மூடல்

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சியில் முக்கொம்பு சுற்றுலா தலம், வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பிரதான சுற்றுலா மையமான முக்கொம்பு பூங்கா மூடப்பட்டுள்ளது.

திருச்சி-கரூா் சாலையில் உள்ள இந்தப் முக்கொம்பு பூங்காவானது, காவிரி, கொள்ளிடம் பிரிந்து செல்லும் இடத்தில் அணைக்கட்டு பகுதியில் உள்ளது. கொள்ளிடம் மேலணைக்குச் செல்லும் பகுதிக்கு முன்னுள்ள இந்தப் பூங்காவில் சிறுவா்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், படகு, ராட்டினங்கள், சிறுவா்கள் ரயில் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இந்தப் பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வருவா். கடந்தாண்டு 8 மாதங்களாக மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் தற்போது, மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு செல்லும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், கரோனா பரவலைத் தடுக்க அரசின் மறு உத்தரவு வரும் வரை முக்கொம்பு சுற்றுலாத் தலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா: ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள இந்தப் பூங்காவில் செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள், வண்ணத்துப்பூச்சி மாதிரிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் இந்தப் பூங்காவும் மூடப்பட்டுள்ளது. துறையூா் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலா தலமும் மூடப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT