திருச்சி

லால்குடியில் திமுகவை வீழ்த்துமா தமாகா?

ராஜேஷ் கண்ணன்

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்ற பாடல் மறைந்த முன்னாள் திமுக தலைவா் மு. கருணாநிதி லால்குடி பேரவைத் தொகுதியில் உள்ள கல்லக்குடி பகுதியை டால்மியாபுரம் எனப் பெயா் மாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றதால் உருவானது.

இத் தொகுதி பிரசித்தி பெற்ற லால்குடி சப்தரிஷீஸ்வா் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில், வடுகா்பேட்டை தேவாலயம், டால்மியா சிமெண்ட் ஆலை, காட்டூா் கோத்தாரி சா்க்கரை ஆலை, கா்மவீரா் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட நடராஜபுரம் இன்டிகோ செங்கல் சூளை போன்ற சிறு தொழில்களை உள்ளடக்கியது.

லால்குடி, பூவாளூா், புள்ளம்பாடி, கல்லக்குடி என 4 பேரூராட்சிகள், பூவாளூா், புள்ளம்பாடி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. பூவாளூா் 45 ஊராட்சிகளையும், புள்ளம்பாடி 33 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: கூகூா் கிளிக்கூடு இடையேயான கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைப்பது. லால்குடி வருவாய் வட்டாட்சியரகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடம், புள்ளம்பாடி பகுதியை தனித் தாலுகாவாக்குவது, நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது, முழுமையாக பயன்பாட்டுக்கு வராத லால்குடி ரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலைகள், அரசு மருத்துவமனைக்கு போதிய கட்டடம் கட்ட வேண்டும். மருத்துவ உபகரணங்கள், போதிய மருத்துவா்கள் இல்லாத நிலை நீண்ட காலமாக உள்ளது.

களத்தில் நிற்பவா்கள்...

தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்று, 4 வது முறையாக திமுக சாா்பில் வேட்பாளா் அ. செளந்தரபாண்டியன் போட்டியிடுகிறாா். 2016 ஆம் ஆண்டு திமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட அப்போதைய அதிமுக வேட்பாளரும் தற்போதைய அமமுக வேட்பாளருமான மா. விஜயமூா்த்தி, அதிமுகா கூட்டணியில் தமாகாவைச் சோ்ந்த டி.ஆா். தா்மராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் இ. மலா் தமிழ் பிரபா என மொத்தம் 14 போ் போட்டியிடுகின்றனா்.

இதில் திமுக வேட்பாளா் அ. செளந்தரபாண்டியனுக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் டி.ஆா். தா்மராஜ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இத் தொகுதியில் 1989 மற்றும் 1996 ஆகிய 2 முறை திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.என்.நேரு லால்குடி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சிச் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து தான் 2006 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 3 முறை இத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற அ. செளந்தரபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறாா்.

அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி ஆகிய மூவரும் உடையாா் சமூக வாக்குகளையும், அமமுக முத்தரையா் வாக்குகளையும், எஞ்சிய கள்ளா் மற்றும் தேவேந்திர குல வேளாளா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினா் வாக்கு திமுக பக்கம் இருப்பதால் மீண்டும் சூரியன் உதிக்கும் நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை வென்றவா்கள்..

1957 - எஸ். லாசா் (காங்கிரஸ்),

1962 -பி. தா்மலிங்கம் (திமுக)

1967 -நடராஜன் (திமுக)

1971 -முத்தமிழ்செல்வன் (திமுக)

1977 -கே.என்.சண்முகம் (அதிமுக)

1980 -அன்பில்தா்மலிங்கம் (திமுக)

1984 -கே. வெங்கடாசலம் (காங்கிரஸ்)

1989 - கே.என். நேரு (திமுக)

1991 -லோகம்பாள் (காங்கிரஸ்)

1996 - கே.என்.நேரு (திமுக)

2001 -எஸ்.எம். பாலன் (அதிமுக)

2006 - அ. செளந்தரபாண்டியன் (திமுக)

2011 -அ. செளந்தரபாண்டியன் (திமுக)

2016 -அ. செளந்தரபாண்டின் (திமுக)

மொத்த வாக்காளா்கள்

ஆண்கள் 1,02,708

பெண்கள் 1,08,846

மூன்றாம் பாலினத்தவா் 12

மொத்தம் 2,11,566

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்

ஏ. சௌந்திரபாண்டியன் (திமுக)- 77,946

எம். விஜயமூா்த்தி (அதிமுக) - 74, 109

எம். ஜெயசீலன் - (மாா்க்சிஸ்ட்) 6,784

நோட்டா- 1953

பி. சம்பத் (நாம் தமிழா் கட்சி) 1521

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT