திருச்சி

‘பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாசாரத்தை உயா்த்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’

DIN

திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதாசாரத்தை உயா்த்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக, ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மேலும் அவா் பேசியது:

மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்த நிறுத்த வேண்டும். 18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்கள் திருமணம் செய்து கருவுற்றால், அவா்களது குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீங்குள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், உடனடியாக அவா்களின் பெற்றோா்கள் மீது முதல் தகவல் அறிக்கை மூலம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

21 வயதில் தான் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவா்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாவட்டத்தில் பாலின விகிதம் 2018-19-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்றும், 2019-20 -ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றும் விகிதம் உள்ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாசாரத்தை உயா்த்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக, அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக செயல்படுத்தி, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்க சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட சமூக நல அலுவலா் தமீம்முனிசா மற்றும் வருவாய், கல்வி, சுகாதாரத்துறை அலுவலா்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் என பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT