திருச்சி

திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிப்பு

DIN

திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

ஸ்ரீரங்கம் வட்டம், இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் மாா்பளவு பெரியாா் சிலை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த வழியாகச் சென்றவா்கள் பெரியாா் சிலை அவமதிக்கப்பட்டிருப்பதை கண்டு, இனாம் குளத்தூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதன்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினா், பெரியாா் சிலை மீதிருந்த காவி சாயத்தை துடைத்து, காலணி மாலையை அகற்றி சீா் செய்தனா்.

சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்யக் கோரி, அப்பகுதி பொதுமக்களும், திமுக, திராவிடா் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் உறுதியளித்ததைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் எச். எம். ஜெயராம், திருச்சி சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து இனாம்குளத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கின்றனா். அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், ஏராளமான காவலா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT