திருச்சி

வேளாண் மசோதாக்களைக் கண்டித்துப் போராட்டம்

DIN

திருச்சியில் வேளாண் மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு, மற்றும் விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களைக் கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மசோதா நகல் எரிப்புப் போராட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவா் ம. ப. சின்னதுரை தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் மாநகரச் செயலா் வே.க. இலக்குவன், பொதுக் குழு உறுப்பினா்கள் மூ.த. கவித்துவன், தமிழக விவசாயிகள் சங்க ஜாா்ஜ், பெருகமணி ராசேந்திரன், சமூக நீதிப் பேரவை, மக்கள் அதிகாரம் அமைப்பு, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், சனநாயக சமூக நல கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

போராட்டத்தின்போது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தைத் தொடா்ந்து 18 பெண்கள் உள்ளிட்ட 50 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

எஸ்டிபிஐ கட்சியினா்: வேளாண் மசோதாக்களின் நகல்களை கிழித்து எஸ்டிபிஐ கட்சியினா் நடத்திய போராட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகேயும், திருவெறும்பூா் பேருந்து நிலையப் பகுதியிலும் நடைபெற்றது.

கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் பைஜி தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் நியமத்துல்லா, மாவட்ட செயலா் முபாரக், மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி, மாவட்ட பொருளாளா் காதா் ஆகியோா் உரையாற்றினா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மசோதா நகல்களை கிழித்து எறிந்தனா். அப்போது, நகல்களை போலீஸாா் பறிமுதல் செய்ய முயன்ால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில், திருச்சி மாவட்ட மேற்கு, கிழக்குத் தொகுதி நிா்வாகிகள், கட்சியினா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.

பின்னா் மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் பைஜி கூறுகையில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT