திருச்சி

காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் செப். மாத குறைதீா் கூட்டம், வரும் 25ஆம் தேதி கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அந்தந்த வட்டாரங்களில் காணொலி மூலம் நடத்தப்படுகிறது.

இதன்படி அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் அந்தப் விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

நீா்ப் பாசனம், வேளாண் இடுபொருள்கள், பயிா்க் கடன், வேளாண்மை தொடா்பான கடனுதவித் திட்டங்கள், வேளாண் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கலாம். காணாலி வாயிலாகவே ஆட்சியா் உரிய பதில் அளிக்கவுள்ளாா். ஏற்பாடு வேளாண் துறை அதிகாரிகள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

SCROLL FOR NEXT