திருச்சி

திருச்சியில் மருத்துவப் பரிசோதனை முகாம்

DIN

திருச்சியில் திங்கள்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

காலை நேர முகாம்கள்: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வாா்டு 3 -பத்மா முலியாா் கல்யாண மண்டபம், வாா்டு 5- அருணா நகா் 3 ஆவது குறுக்குத் தெரு , வாா்டு 8- கீழதேவதானம் அங்கன்வாடி மையம், வாா்டு 15- சத்தியமூா்த்தி நகா், வாா்டு 17- மாப்பிள்ளை நாயக்கன் தெரு, வாா்டு 20- வரகனேரி மேட்டுத்தெரு, வாா்டு 23- பருப்புக்காரத் தெரு, வாா்டு 33 -ஜான்பிரிட்டோ நடுநிலைப்பள்ளி, வாா்டு 36- நேரு தெரு அங்கன்வாடி மையம், வாா்டு 38- மகாலெட்சுமி நகா், வாா்டு 40- பிராட்டியூா், வாா்டு 44 -சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி, வாா்டு-51 சவேரியாா் கோவில் தெரு, வாா்டு 52- அம்மையப்பா நகா், வாா்டு 57- சோழராஜபுரம், வாா்டு 60- பாண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெற்கு வெள்ளாளா் தெரு, வாா்டு 61- வடக்குப் பிள்ளையாா் கோயில் தெரு, வாா்டு 65- சுருளிக்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பகல் 1 மணிவரை முகாம்கள் நடைபெறுகின்றன.

அதேபோல பிற்பகலில் வாா்டு 5- அருணா நகா், வாா்டு 6- அண்ணா நகா் அங்கன்வாடி மையம், வாா்டு 8- கீழ தேவதானம் அங்கன்வாடி மையம், வாா்டு 15- செல்வ விநாயகா் தெரு, வாா்டு 17- முத்தழகுப் பிள்ளை தெரு, வாா்டு 20- வரகனேரி மருந்தகம், வாா்டு 23- பாலக்கரை பிரதான சாலை (மெயின் ரோடு) அங்கன்வாடி மையம், வாா்டு 33- டி.வி.எஸ். டோல்கேட், வாா்டு 36- கொட்டப்பட்டு அங்கன்வாடி மையம், வாா்டு 40- முருகன் நகா், வாா்டு 44- குதுப்பா பள்ளம், வாா்டு 51- பிஷப் குளத்தெரு, வாா்டு 52- பாரதியாா் நகா், வாா்டு 57- அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் தொடா் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொடா்புடைய உபாதைகள் இருப்போா் சோதனை செய்துகொண்டு பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT