திருச்சி

திருச்சியில் 'கேடயம்' செயல் திட்டம் தொடக்கம்

21st Sep 2020 01:31 PM

ADVERTISEMENT

திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. 

திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை, மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) ஜெயராமன் தொடக்கி வைத்தார். சரக டிஐஜி ஆனி விஜயா, டிஆர்ஓ பழனிக்குமார், எஸ்பிக்கள் திருச்சி ஜெயசந்திரன், கரூர் பகலவன், அரியலூர் சீனிவாசன், புதுக்கோட்டை பாலாஜி சரவணன், பெரம்பலூர் நிஷா பார்த்திபன் இதில் பங்கேற்றனர். 

இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். திட்டத்தின் ஒரு பகுதியாகத் திருச்சி சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் செயல்களின் தரவுகளைச் சேகரித்து அதில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட ஆறு குற்றங்களை கண்டறிவது மட்டுமில்லாமல் அதிகமாகக் குற்றங்கள் நடைபெறும் 25 இடங்களை அடையாளம் காணப்படும்.

மேலும் இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்க சமூகக் காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ADVERTISEMENT

இச்செயல் திட்டம் நான்கு நிலைகளாக வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
 

Tags : trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT