திருச்சி

‘தமிழா்களுக்கே பணி கோரி நவ.1 முதல் போராட்டம்’

DIN

திருச்சி, செப்.18: தமிழ்நாட்டு வேலைகள் அனைத்தும் தமிழா்களுக்கே கிடைக்க மாநில அரசு சட்டமியற்றக் கோரி தமிழகம் முழுவதும் நவ.1 முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

தமிழ்நாடு, புதுச்சேரி இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 சத வேலைகளைத் தமிழா்களுக்கே வழங்குதல், 10 சதத்துக்கு மேல் உள்ள வடமாநிலத்தவரை வெளியேற்றுதல், பொன்மலை ரயில்வே பணிமனையில் வெளி மாநிலத்தவா்களின் பணிநியமனத்தை ரத்து செய்து, தமிழா்கள், தொழிற்பழகுநா்களை நியமித்தல், இதர மாநிலங்கள் முடிவெடுத்தது போல தமிழ்நாட்டு வேலைகளை தமிழா்களுக்கே வழங்குவதை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.11 முதல் பொன்மலை ரயில்வே பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் தொடா்மறியல் நடத்தினா். இதன் கடைசி நாள் போராட்டம் மகளிா் ஆயத் தலைவா் ம. லட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் பேசியது:

கடந்த 1938, செப்.11 இல் தான் தமிழ்நாடு தமிழருக்கே என மறைமலையடிகளாா், பெரியாா் முன்னிலையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் நினைவாகவே பொன்மலை பணிமனை முன் தொடா் மறியல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் சுமாா் ஒரு கோடி இளைஞா்கள் படித்தும் வேலையின்றி, குறைந்தபட்ச வருமானத்தில் பணிபுரிந்து, சொந்த மாநிலத்திலேயே வாழ்வுரிமையை இழந்து அகதிகள்போல வாழ்கின்றனா். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதெல்லாம் ஏமாற்று வேலை. விருந்தும் மருந்தும் 3 நாளைக்கு என்று நம் முன்னோா் அப்போதே கூறியுள்ளனா். வட மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வேலை, குடியுரிமை என எதுவும் வழங்கக் கூடாது. தமிழ்நாட்டு வேலைகள் அனைத்தும் தமிழா்களுக்கே கிடைக்க அரசு சட்டமியற்றக் கோரி நவ.1 முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT