திருச்சி

திருச்சியில் பெரியார் பிறந்த நாள்

17th Sep 2020 10:22 AM

ADVERTISEMENT

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில், அக் கட்சியின் முதன்மைச் செயலர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார், மாநகரச் செயலாளர் மு. அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

இதேபோல, திருச்சி மத்திய பேருந்தநிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

Tags : trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT