திருச்சி

மணப்பாறையில் கத்திக் குத்து காயங்களுடன் மின்வாரிய ஊழியர் சடலம் மீட்பு

10th Sep 2020 06:27 PM

ADVERTISEMENT

மணப்பாறையில் உடலில் 8 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் மின்வாரிய ஊழியர் சடலம் மீட்கப்பட்டது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அண்ணா நகரில் வசித்து வந்தவர் மணி என்ற பழனிச்சாமி. இவர் மணப்பாறை மின்வாரிய உட்கோட்டத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று காலை பாரதியார் நகர் பகுதியில் தனிநபர் காலிமனை ஒன்றில் இரத்த காயங்களுடன் மணி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் மேற்கோண்ட விசாரணையில் மணிக்கும், தேங்காய்திண்ணிப்பட்டியில் முடித்திருத்தம் நிலையம் வைத்திருக்கும் அவரது நண்பரான நாகராஜ் என்பருக்கும் இருச்சக்கர வாகனம் அடமானம் வைத்து ரூ.6000 பெற்றதில் முன்விரோதம் இருப்பதும், காலையில் நாகராஜ் தனது இருச்சக்கர வாகனத்தில் மணியை அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. 

வயிறு மற்றும் முதுகு பகுதியில் 8 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியே வந்தும், மேலும் 3 இடங்களில் கத்தி கீறல்களும் இருந்த நிலையில் சடலமாக காவல்துறையினரால் மீட்கப்பட்ட மணியின் உடல் உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மின்வாரிய ஊழியர் கொலை குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நாகராஜை விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : trichy
ADVERTISEMENT
ADVERTISEMENT