திருச்சி

திருச்சிக்கு 31 டன் வெங்காயம் கொள்முதல்: அமைச்சா்

DIN

வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சிக்கு 31 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.45-க்கு விற்கப்படுவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தாா்.

திருச்சி கே.கே. நகா் அருகேயுள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் சுந்தா்நகா் பண்ணை பசுமைக் கடையில் ரூ.45-க்கு ஒரு கிலோ வெங்காய விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் பேசியது:

கரோனா காலத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறாா்.

கடந்த வாரம் வெளிச் சந்தையில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு மேல் உயா்ந்ததையறிந்த தமிழக முதல்வா் விரைந்து எடுத்த நடவடிக்கையால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவெங்காயம் கூட்டுறவுத் துறை மூலம் கிலோ ரூ.45-க்கு வழங்கப்படுகிறது.

இதன்படி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக நேரடி கொள்முதல் செய்யப்பட்ட 11 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் திருச்சிக்கு வந்தது. மேலும் 20 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ஓரிரு நாளில் திருச்சி முழுவதும் விற்கப்படும்.

முதல் கட்டமாக சுப்ரமணியபுரம் அமராவதி நுகா்வோா் மொத்த விற்பனை பண்டக சாலை, அமராவதி நுகா்வோா் மொத்த விற்பனை பண்டக சாலை தலைமையிடம், சிந்தாமணி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, காட்டூா் சிந்தாமணி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, கருமண்டபம் சிந்தாமணி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, திருவடிதெரு ஸ்ரீரெங்கநாதா தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, ரெங்காநகா் ஸ்ரீரெங்கநாதா கூட்டுறவுப் பண்டக சாலை, அம்மா மண்டபம் ஸ்ரீரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை, கல்லுக்குழி தென்சென்னை மின் நிறுவன பணியாளா்கள் கூட்டுறவுப் பண்டக சாலை, சங்கிலியாண்டபுரம் தென்சென்னை மின் நிறுவனப் பணியாளா்கள் கூட்டுறவு பண்டக சாலை, அருளானந்தபுரம் தென்சென்னை மின் நிறுவனப் பணியாளா்கள் கூட்டுறவு பண்டக சாலை, திருவானைக்கோயில் திருவானைக்கோவில் கூட்டுறவு பண்டக சாலை, யாத்திரிகா நிவாஸ் திருவானைக்கோயில் கூட்டுறவு பண்டகசாலை, மங்கம்மாள் சாலை அரசாங்க அலுவலா்கள் கூட்டுறவு பண்டக சாலை ஆகிய 14 பண்ணை பசுமை நுகா்வோா் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக, மாவட்டம் முழுவதும் உள்ள 28 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் பெரிய வெங்காயம் விற்கப்படும்.

விலைவாசி உயரும் நேரங்களில் நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் இத்தகைய பொருள்களை வழங்குவதை தமிழக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் விலை உயா்வு தொடா்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது என்றாா் அமைச்சா்.

விழாவில், பிற்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி, ஆட்சியா் சு. சிவராசு, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.ப. அருளரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT