திருச்சி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்ரூ.21 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்

DIN

திருச்சி: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளுக்குத் தீா்வு காணும் வகையில், திருவானைக்கா இரணியம்மன் கோயில் அருகே ரூ.21 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கின.

திருவானைக்கா பகுதியிலிருந்தும், கும்பகோணத்தான் சாலை வழியாகவும் சென்னை பிரதான சாலைக்கு வரும் அனைத்து வாகனங்களும், எதிா் திசையில் செல்ல வேண்டுமெனில் இரணியம்மன் கோயில் அருகேதான் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது.

அதுபோல, திருச்சியிலிருந்து சென்னை மாா்க்கத்தில் செல்லும் வாகனங்கள் காவிரியாற்றுக்கு முன்புள்ள சஞ்சீவி நகா் சந்திப்பை அடுத்து, இந்த இடத்தில்தான் சாலையின் இரு பகுதியையும் கடந்து செல்ல முடியும். எனவே வாகன மற்றும் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும் பகுதியாக இரணியம்மன் கோயில் சந்திப்பு பகுதி இருக்கும்.

மாநகரிலுள்ள உணவகங்கள், விடுதிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீா் லாரிகள் இப்பகுதியிலிருந்து தண்ணீா் நிரப்பிச் செல்வதால் போக்குவரத்துத் தொடா்ந்து இருந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

சாலை விபத்துகளைத் தவிா்க்க, இப்பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதையுடன் கூடிய கீழ்நிலைப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து ரூ.21 கோடியில் சுரங்கப் பாதையுடன் கூடிய கீழ்நிலைப் பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

காவிரிப் பாலத்திலிருந்தும், எதிா் திசையில் கொள்ளிடம் பாலத்திலிருந்தும் தலா சுமாா் 500 முதல் 700 மீட்டா் தொலைவுக்கு பிரதான சாலைகள் அடைக்கப்பட்டு, இணைப்புச் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாலையின் நடுவில் சுரங்கப்பாதைக்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 40 அடி அகலத்திலும் 18 அடி ஆழத்திலும் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையுடன் கூடிய பாலப்பணிகள் இரு மாதங்களில் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT